படிப்பை கைவிட்ட குழந்தைகள் விவரம் சேகரிக்கும் கல்வித்துறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 30, 2015

படிப்பை கைவிட்ட குழந்தைகள் விவரம் சேகரிக்கும் கல்வித்துறை

பள்ளிக்கு நீண்ட நாட்களாக வராத குழந்தைகள், படிப்பை பாதியில் கைவிட்ட குழந்தைகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,), 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக உள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல், படிப்பை கைவிட்ட குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி வாய்ப்பு அளித்தல், எஸ்.எஸ்.ஏ., முக்கிய பணி.

தற்போது, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவரம், தற்போது படிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, படிப்பை கைவிட்ட குழந்தைகள், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத குழந்தைகள், அதற்கான காரணங்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அனுப்ப, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. வகுப்பு ஆசிரியர் மூலம், இவ்விவரங்கள் சேகரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, எஸ்.எஸ்.ஏ., அலுவலர் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் வீதி வீதியாக சென்று, படிப்பை கைவிட்ட குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.

No comments:

Post a Comment