எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்கள் விபரம் சேகரிப்பு!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 26, 2015

எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்கள் விபரம் சேகரிப்பு!!!

எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் விபரங்களை சேகரிக்க, கல்வி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில், 14 வயது வரை, கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என கட்டாயக்கல்விச்சட்டம் வலியுறுத்துவதால், எட்டாம்
வகுப்பு வரையில், பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், அடுத்த கல்வியாண்டுக்கான வரைவு திட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், 'நடப்பு கல்வியாண்டில், எட்டாம் வகுப்பு வரையில், பள்ளியிலிருந்து இடையில் நின்ற மாணவர்களின் விபரங்களையும், பள்ளிக்கு வராமல் உள்ள மாணவர்களின் விபரங்களையும் சேகரித்து, மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன், விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார். அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், இந்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்திட்டம் அமைய உள்ளது.

No comments:

Post a Comment