தமிழ்நாட்டில் இப்படி ஒரு அரசு நடுநிலைப் பள்ளியா !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, November 18, 2018

தமிழ்நாட்டில் இப்படி ஒரு அரசு நடுநிலைப் பள்ளியா !!

20 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடைகள் பெற்று, 400 குழந்தைகளுடன் படிக்கும்  தரமான பள்ளியாக மாற்றியிருக்கிறார் இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி ரமாராணி அவர்கள் .
12 ஆசிரியர்கள் , 16 நவீன வண்ணமயமான  வகுப்பறைகள், அதிநவீன கழிவறைகள், நூலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ,தொடுதிரை, திறன் வகுப்பறைகள் , என அசத்தி வருகிறார்கள் . ஆசிரியர்கள்  உறவினர்கள், முன்னாள் மாணவர்கள் , ஊர் மக்கள் என ஒவ்வொருவரின் பங்களிப்புடன் , கல்வி , ஒழுக்கம், வளர்ச்சி என பழமையுடன் புதுமைகளையும் புகுத்தி மிக அருமையாக கைகோர்த்து அசத்தி வருகிறார் இப்பள்ளியின் தலைமையாசிரியர்.

சமீபத்தில் 75 ஆம் ஆண்டின் பவள விழாவை முன்னிட்டு பள்ளியின் நவீன வகுப்பறைகள், திருவள்ளுவர் சிலை என அனைத்தையும் கல்வி அமைச்சர் திரு. K.A செங்கோட்டையன், MLA,MP என அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்து வாழ்த்தி சென்றுள்ளார்கள் .

விழா நிகழவுக்கான முகப்பு அலங்காரங்கள் மட்டுமே அரண்மனை போன்று ..
கிட்ட தட்ட 1 இலட்சம் மதிப்பில் ஊர்மக்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது..

உண்மையில் தலைவணங்குகிறேன் ஊர் மக்களுக்கு .
ஊர்மக்கள் எப்பொழுது பள்ளிக்கு படையெடுத்து போட்டிபோட்டு உதவுகிறார்களே , அப்பொழுதுதான் அந்த ஊரின் வளர்ச்சி சிறப்பாக அமையும் என்பது என் நம்பிக்கை..
இவ்வூரில் பலர் படித்து நல்ல நிலையில் உள்ளார்கள் ..
அவர்களின் ஊக்கமும் ஆக்கமும் மிகச்சிறந்த பலம் என்று தலைமையாசிரியர் பெருமையுடன் கூறியது , நெகிழ வைக்கிறது.

ஒவ்வொரு புகைப்படமும் ஆயிரம் கதைகள் சொல்கிறது , ஒராயிரம் உழைப்பு தெரிகிறது..
நாமும் இப்பள்ளியில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்காதா என ஏங்க வைக்கிறது.

தலைமையாசிரியர், சக ஆசிரியர்களுக்கு மனமார்ந்த  வாழ்த்துகள்!!
Heartiest wishes From
P.Ganapathy, Pups Pathiri, Olakkur block, Villupuram DT.

பாரட்ட நினைத்தால்
தொடர்புக்கு ::
திருமதி ரமாரமணி H.M,
9865973870
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- கூகலூர்,
கோபி- ஈரோடு மாவட்டம் .

For more details :
https://m.facebook.com/story.php?story_fbid=2051740544939993&id=100003122022239

1 comment: