தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து கோடை விடுமுறை நாட்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த திருப்புதல் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் மே மாதம் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்வுக்கான நாட்கள் மிக குறைவாக உள்ள நிலையில் ஆசிரியர்கள் பொதுத் தேர்வுக்கான பாடங்களை விரைந்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது.அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. மேலும் 11ம் வகுப்பிற்கு மே 9 முதல் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. அதனை தொடர்ந்து 10ம் வகுப்பிற்கு மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து பாட வாரியான கால அட்டவணையும் வெளியாகி உள்ளது. தேர்வுகள் முடிந்த பிறகு கோடை விடுமுறை விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது எந்தெந்த வகுப்பிற்கு எத்தனை நாட்கள் கோடை விடுமுறை என்பது குறித்து தெரிந்து கொள்வோம்
கோடை விடுமுறை நாட்கள்
9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 30 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்படும்
12ம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் கோடை விடுமுறை
11ம் வகுப்பு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு 23 நாட்கள் கோடை விடுமுறை
No comments:
Post a Comment