ரயில்வே குறைந்தபட்ச கட்டணம்: ரூ. 10 ஆக உயர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 18, 2015

ரயில்வே குறைந்தபட்ச கட்டணம்: ரூ. 10 ஆக உயர்வு

குறைந்தபட்ச கட்டணத்தை ஐந்து ரூபாயிலிருந்து பத்து ரூபாயக உயர்த்துவது என இந்திய ரயில்வே தீர்மானித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நவம்பர் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ரயில் நிலையங்களுக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் பிளாட்பாரம் கட்டணத்தை ரூ. 10 ஆக உயர்த்தப்படும் என கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த
கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்தது.
எனினும், சிறிய தூரம் இயக்கப்படும் ரயில்களுக்கான, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5 ஆகவே இருந்தது. இதைப் பயன்படுத்தி, பெரும்பாலான பயணிகள் குறைந்தபட்ச கட்டண டிக்கெட்டை எடுத்து கொண்டு ரயில் நிலையத்தில் நுழைந்துவிட்டனர்.
இதனால், ரயில் நிலையங்களுக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை குறைப்பது என்ற ரயில்வேயின் குறிக்கோள் நிறைவேறவில்லை.
இதைத்தொடர்ந்து சிறிய தூரம் இயக்கப்படும் ரயில்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ. 10 என உயர்த்துவது என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு நவம்பர் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
எனினும், இந்த கட்டண உயர்வு பெருநகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களுக்கு பொருந்தாது.

No comments:

Post a Comment