திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு பகுதி நேர கணினி பயிற்றுநர், 2 சமையலர், 2 உதவி சமையலர், 2 காவலர், 3 துப்புரவாளர், ஒரு தண்ணீர் விடுபவர், ஒரு தோட் டக்காரர், ஒரு ஆயா ஆகிய 13 காலி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன்படி, பகுதி நேர கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர், பிஎஸ்சி கணினி அறிவியல் அல்லது பிசிஏ அல்லது பிஎஸ்சி கணிதம் அல்லது இயற்பியல் அல்லது புள்ளியியல் படிப்புடன் ஓராண்டு கணினியை கையாண்ட அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இரு காவலர் பணியிடங்களில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எம்பிசி மற்றும் சீர்மரபினர் ஒரு இடத் துக்கும் பிசி (முஸ்லீம் அல்லாத வர்) ஒரு இடத்துக்கும் விண்ணப் பிக்கலாம்.
அதே போல் 2 சமையலர் பணியிடங்களில், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிசி (முஸ்லீம் அல்லாதவர்) விதவை மற்றும் ஆதரவற்ற பெண்கள் ஒரு இடத் துக்கும் எஸ்சி விதவை மற்றும் ஆதரவற்ற பெண்கள் மற்றொரு இடத்துக்கும் விண்ணப்பிக்கலாம். 2 உதவி சமையலர் பணியிடங்களில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிசி (முஸ்லீம் அல்லாதவர்) பெண்கள் ஒரு இடத்துக்கும், பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண்கள், மற்றொரு இடத்துக்கும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் 3 துப்புரவாளர் பணி யிடங்களில் எழுதப் படிக்கத் தெரிந்த எம்பிசி பிரிவைச் சேர்ந்த வர்கள் ஒரு இடத்துக்கும், காது கேளாத அல்லது மாற்றுத் திறனாளிகள் ஒரு இடத்துக்கும், எஸ்சி பெண்கள் ஒரு இடத்துக்கும் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் தண்ணீர் விடுபவர், தோட்டக்காரர் பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்களும், ஆயா பணியிடத்துக்கு எழுத படிக்கத் தெரிந்த பிசி (முஸ்லீம் அல்லாதவர்) பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடங்களுக்கு விண் ணப்பிப்போருக்கான வயது வரம்பு: நடைமுறை விதிகளின்படி, எஸ்சி மற்றும் எஸ்டி -பிரிவினருக்கு 35, பிசி மற்றும் எம்பிசி- பிரிவினருக்கு 32, பொதுப்பிரிவினருக்கு 30 என்ற வகையில் இருக்க வேண்டும்.
தகுதியுள்ளோர் கல்வித்தகுதி சான்றிதழ்கள், குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் முதல்வர், பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, பூந்தமல்லி, சென்னை-56 என்ற முகவரிக்கு, வரும் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment