(17-11-15) TATA சார்பில் தொடக்ககல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்களை சந்தித்து நமது கோரிக்கைகள் வைக்கப்பட்டது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 17, 2015

(17-11-15) TATA சார்பில் தொடக்ககல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்களை சந்தித்து நமது கோரிக்கைகள் வைக்கப்பட்டது

1.இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் வழக்கு குறித்தும் நிதி துறைச்செயலாளரின் கடிதத்திற்கு இடைநிலை ஆசிரியரின் கல்வித்தகுதி பணித்தன்மை குறித்து கேட்கபட்டதற்கு 215 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களின் தொகுப்பு வழங்கப்பட்டது(இவை
பள்ளிக்கல்வித்துறை செயலாளரின் நேர்முக உதவியாளர் மற்றும் நிதித்துறைச்செயலாளரிடமும் வழங்கப்பட்டது)
2.திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் மீதான புகர் வழங்கப்பட்டது இவர் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்
3.திருச்சி மாவட்டம் தா.பேட்டை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ரேவதி மீதான புகார் வழங்கப்பட்டது இவர்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்
4.விநாயகம்மிஷன் பல்கலை கழகத்தில் படித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற நமது கோரிக்கைக்கு ஆணை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்
5.பணிமாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை விடுவித்தல் வேண்டும்
6.ஆசிரியர்கள் உயர்கல்விக்கு பின் அனுமதி ஆணை வழங்க வேண்டும்
7.நெல்லை மாவட்டம் DEEO அலுவலக கண்காணிப்பாளர் மாலா உட்பட பலர் மீது பொதுச்செயலாளர் அளித்த புகார் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ள நகல் வழங்கப்பட்டது இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பணியிட மாற்றம் செய்வதாக உறுதியளித்துள்ளார்

No comments:

Post a Comment