பள்ளிகளில் 4 முறை வருகை பதிவு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, November 14, 2015

பள்ளிகளில் 4 முறை வருகை பதிவு!

பள்ளிகளில், தினமும் நான்கு முறை வருகைப் பதிவு செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து பள்ளிகளிலும், தினமும், நான்கு வேளையும், மாணவர்களின் வருகையை உறுதிபடுத்த வேண்டும். அதாவது, காலையில் வகுப்பு துவங்கியதும், வருகைப்பதிவு எடுக்க வேண்டும். இடைவேளை முடிந்து, மாணவர்கள் மீண்டும் வகுப்புக்கு வந்ததும், இரண்டாவது முறையாக, வருகை பதிவேடு சரிபார்க்கப்பட வேண்டும். தொடர்ந்து, மதிய உணவு முடிந்து, வகுப்பு துவங்கும் போதும்; மாலை இடைவேளைக்கு பிறகும் சரிபார்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பள்ளிகளில் தண்ணீர் தேங்கினால், மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றவும், தண்ணீர் மற்றும் மின் சாதனங்கள் அருகில் மாணவர்கள் செல்லாமல் தடுக்கவும், ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment