சத்துணவு பொருட்கள்பத்திரப்படுத்த உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 18, 2015

சத்துணவு பொருட்கள்பத்திரப்படுத்த உத்தரவு

தொடர் மழையால், சத்துணவு மையங்களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் பாதிக்காதவாறு, பத்திரப்படுத்தும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 42,970 பள்ளி சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவ, மாணவியர் சாப்பிடுகின்றனர்; 97ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், புயல், மழைக்கு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான இடங்களில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில், வெள்ளம் புகுந்துள்ளது. பல மையங்களின் மேற்கூரைகள் ஒழுகுகின்றன. எனவே, சத்துணவு மைய இருப்பு அறையில் அரிசி, பருப்பு, கொண்டைக் கடலைஉள்ளிட்ட உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக உள்ளனவா என, கண்காணிக்கும் படியும், மழையில் நனையாமல், பத்திரப்படுத்தும் படியும், அமைப்பாளர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment