படிக்க உதவுங்கள்; பள்ளிகள் எஸ்.எம்.எஸ்., - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 18, 2015

படிக்க உதவுங்கள்; பள்ளிகள் எஸ்.எம்.எஸ்.,

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, டிசம்பர் முதல் வாரத்தில், அரையாண்டுத் தேர்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், டிச., 23க்குள், இரண்டாம் பருவத் தேர்வுகளை முடிக்கவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. ஆனால், பருவமழையின் தீவிரம் காரணமாக, 10 நாட்களாக பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதனால், குறிப்பிட்ட காலத்திற்குள், பாடங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பல தனியார் பள்ளிகள், பெற்றோர் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றன. அதில், மழை விடுமுறையால், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விடுமுறை நாட்களில், மாணவர்கள் வீட்டில் பொழுதைக் கழிக்காமல், பாடங்களை படிக்க, பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்; இவ்விஷயத்தில், பிள்ளைகளுக்கு உதவ வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment