வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் கனமழை நீடிப்பு; அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 12, 2015

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் கனமழை நீடிப்பு; அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

தமிழகத்தில் பரவலாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி தெற்கு அரபிக்கடல் நோக்கி நகர்ந்துள்ளது. லட்சத்தீவு நோக்கி நகர்ந்த சுழற்றி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலையானது மேலும் வலுவடைந்து வரும் 14-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் ஏற்படவுள்ள மழை நிலவரம் குறித்த அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் கனமழை:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் எனவும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யும் எனவும், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமான் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், செய்யாறு பகுதிகளில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment