கடலூரில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர்
வங்க கடலில் உருவாகி இருந்த புயல் சின்னம் கடந்த 8ந் தேதியில் இருந்து கடலூர்விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூர் அருகே கரையை கடந்து நிலப் பகுதிக்கு வந்தது. அப்போது மிக பலத்த மழை பெய்தது. இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடானது. ஒரு லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் கடலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உள்ளன. 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் துண்டிக்கபட்டு உள்ளது.கடலூர் மாவட்டத்தில் கன மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது
‘
பண்ருட்டியில் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியானர்கள் இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியான சோகம். கடலூர் மாவட்டத்தில் 189 கால்நடைகள் உயிரிழந்தன. 5 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன.
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை யினால் பாதிக்கப்பட்ட நகர்புறங்கள், கிராம புறங்கள் மற்றும் நகராட்சி பகுதிகளில் முகாமில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ள பொது மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க முதல்அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
பலத்த மழை, வெள்ளம் காரணமாக கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப் படுவதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டு உள்ளது.
No comments:
Post a Comment