தெற்கு அந்தமான் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு தமிழகம் - புதுச்சேரியில் மீண்டும் பலத்த மழை பெய்யும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 11, 2015

தெற்கு அந்தமான் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு தமிழகம் - புதுச்சேரியில் மீண்டும் பலத்த மழை பெய்யும்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 3 நாட்களாக வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூர் அருகே கரையை நேற்று முன்தினம் கடந்தபோது வரலாறு காணாத வகையில்  45 செ.மீ அளவுக்கு மழை கொட் டியது.

இதனால் கடலூர், சிதம்பரம், நெய்வேலி பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இந்த சூழலில் கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து தற்போது வேலூர் - திருப்பத்தூர் இடையே நிலை கொண்டுள்ளது.வேலூருக்கு தென் மேற்கே 60 கிலோ மீட்டர் தொலை விலும், திருப்பத்தூருக்கு கிழக்கே 80 கிலோ மீட்டர் தூரத்திலும் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதியாக மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபூரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

கடலூர் அருகே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நேற்று மாலை வேலூர் - திருப்பத்தூர் இடையே நிலை கொண்டிருந்தது.  இது கர்நாடகா நோக்கி நகர்ந்து செல்வதால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அனேக இடங்களில் இன்று மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதியில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே தெற்கு அந்தமான் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி வருகிறது. இது நகர்ந்து வரும் பட்சத்தில் தமிழகம் - புதுச்சேரியில் வருகிற ஞாயிற்றுக் கிழமை (15-ந் தேதி) முதல் மீண்டும் பலத்த மழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பலத்த மழை, வெள்ளம் காரணமாக கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்  படுவதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment