பிளாஸ்டிக் ’லஞ்ச் பாக்ஸ்’ல் சூடான உணவு வேண்டாம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 12, 2015

பிளாஸ்டிக் ’லஞ்ச் பாக்ஸ்’ல் சூடான உணவு வேண்டாம்!

பள்ளி மாணவர்களுக்கு வண்ணமயமாக இருப்பது பிடிக்கும் என்பதால், பெரும்பாலான பெற்றோர் பிளாஸ்டிக் பாக்ஸ்களில், மதிய உணவுகள், ஸ்னாக்ஸ் போன்றவற்றை வைத்து அனுப்புகின்றனர். பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸில் உணவுகளை வைத்து உண்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது. வெளிப்படையான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

பள்ளி ஆசிரியர் பாரதி கூறுகையில், பெரும்பாலான மாணவர்கள் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸை பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள ரசாயனங்கள் உணவில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தும். பெற்றோர் தரமான டிபன் பாக்ஸ்களை மட்டுமே கொடுக்கவேண்டும், என்றார்.

அரசு மருத்துவமனை புற்றுநோய் பிரிவு மருத்துவர் அகிலா கூறுகையில், பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸில் உணவுகளை உண்பதால் புற்றுநோய் ஆபத்து உள்ளது என, அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், சூடான உணவு பொருட்களை, அதில் வைப்பதை தவிர்க்கவேண்டும், என்றார்.

No comments:

Post a Comment