அண்ணா பல்கலை: ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 18, 2015

அண்ணா பல்கலை: ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஒத்தி வைக்கப்பட்ட  தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக, அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அண்ணா பல்கலை மற்றும் அதன் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளிலும் வெள்ள
நீர் சூழ்ந்திருந்தது. மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.
ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளின் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.,2 முதல் 12 வரை பல்கலை வளாகத் தேர்வுகளும், பொறியியல் கல்லூரிகளில் டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும் www.annauniv.edu என்ற இணையதளத்தில் தேர்வு தேதிகளை அறியலாம்.

No comments:

Post a Comment