கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையும் (புதன்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 24 மணி
நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது, வடதமிழகம் அருகே நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை முன்னறிவிப்பு எதிரொலியாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கும் புதன்கிழமை மழை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment