சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், நடந்து முடிந்த தேர்வுகளின் விடைத்தாள்களை பெற்றோரின் பார்வைக்கு அனுப்பி வைக்க சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு, உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில், பருவத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த மாதத்தில், காலாண்டு தேர்வு மற்றும் இடை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், மாணவர்கள் எழுதிய
விடைத்தாள்களை, பள்ளி நிர்வாகம் பெற்றோரின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், விடைத்தாள் சேதமாகிவிடும் என்பதாலும், அதன் பின் அதை விற்பனை செய்ய முடியாது என்பதாலும், மாணவர்களிடம் வழங்குவதில்லை.
அரசு பள்ளிகளில் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும், இதே நிலை நீடித்தது. இதனால், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து, பெற்றோர் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாத நிலை உருவானது.
இந்நிலையில், நடத்தி முடிக்கப்பட்ட தேர்வுகளின் விடைத்தாள்களை, பெற்றோரின் பார்வைக்கு அனுப்பி வைக்க, சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகௌரி உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கும், இந்த உத்தரவு சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment