புதுவை முதல்–அமைச்சர் ரங்கசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
புதுவை அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மில்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டை போலவே
இந்த ஆண்டும் போனஸ் வழங்கப்படும். இவர்களுக்கு அதிகபட்சமாக போனஸ் தொகை ரூ.11 ஆயிரம் கிடைக்கும். போனஸ் தொகை இன்னும் 2 நாளில் பட்டுவாடா செய்யப்படும்.
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே போனஸ் தொகை வழங்கப்பட்டு விடும். பண்டிகையையொட்டி சிவப்புநிற ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி–சேலை இன்று முதல் வழங்கப்படும். கோதுமைக்கு பதிலாக சன்பிளவர் ஆயில் (சூரியகாந்தி எண்ணெய்) ½ கிலோ இலவசமாக வழங்கப்படும். இதனை தீபாவளி பண்டிகைக்கு முன்னரே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment