பொறியியல் மாணவியர்க்கு உதவித்தொகை அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 6, 2015

பொறியியல் மாணவியர்க்கு உதவித்தொகை அறிவிப்பு

நடப்பு கல்வியாண்டில், பி.இ., பி.டெக்., மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவியர், 4,000 பேருக்கு, மத்திய அரசின், பிரகதி திட்டத்தில், உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதேபோல், இப்படிப்புகளில் சேர்ந்துள்ள மாற்றுத் திறனாளி
மாணவர்கள், 1,000 பேருக்கு, சாக் ஷம் என்ற திட்டத்தில், உதவித் தொகை அளிக்கப்படுகிறது.
இவர்களுக்கு, கல்வி கட்டணமாக, 30 ஆயிரம் ரூபாய்; மாதம், 2,000 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற, கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கு மட்டும், உதவித் தொகை கிடைக்கும்.
உதவித்தொகை பெற, குடும்ப ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம், நவ., 23 வரை விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment