வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதன்காரணமாக சென்னை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
தென்மேற்கு வங்கக்கடலில் சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர மடைந்து, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறி 9-ம் தேதி (நேற்று) இரவு சென்னை - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
காற்றழுத்தம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை முதலே கனமழை பெய்யத் தொடங்கியது. காற்றின் வேகமும் அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டியது. பலத்த காற்றால் கடலோர மாவட்டங்களின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் விநியோகமும் தடைபட்டது.
இந்நிலையில் நேற்று காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக கடல் மற்றும் தரைக்காற்றின் வேகம் அதிகரித்தது. மணிக்கு 60 கி.மீ. வேகத் தில் காற்று வீசியது. மேற்கு வடமேற்காக நகரத் தொடங்கிய ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க 4 மணி நேரம் ஆகும். இந்த காலகட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 75 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும். கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை யும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக் கூடும்.சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். சில நேரங்களில் கனமழை பெய்யக் கூடும். காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் தரைப்பகுதியை அடைந் ததும், வட கடலோர மாவட்டங்களில் மழை குறையும். அதே நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணா மலை உள்ளிட்ட உள் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.
கடந்த ஆண்டில் அக்டோபர் மாதத் தில் மழை குறைவாகவே பெய்தது. ஆனால் இந்த ஆண்டு, வழக்கத்தைவிட வடகிழக்கு பருவ மழை சற்று அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிவாரணப் பணிகள்
இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் கடலோர மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதையடுத்து, நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கிவிட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்தவர்கள், பாதுகாப்பான இடங் களுக்கு அனுப்பி வைக் கப்பட்டனர். அவர் களுக்கு உணவு வழங்கப் பட்டது.
கனமழையால் கடலூர் மாவட்டத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள் ளது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் உஷார்படுத் தப்பட்டுள் ளனர். மின் விநியோகம் முற்றி லும் நிறுத்தப்பட்டதால் மக்கள் கடும் அவதிப் பட்டனர். முறிந்து விழுந்த மரங்களை அகற்றுதல், மின் விநியோகத்தை சீரமைத்தல் போன்ற பணிகள் போர்க்கால அடிப் படையில் நடந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
அம்பத்தூரில் 20 செ.மீ. மழை
தமிழகத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக சென்னை அம்பத்தூரில் 20 செ.மீ. மழை பெய்துள்ளது. சிதம்பரம், திருவண்ணா மலை 19, காரைக்கால், செங்கல்பட்டு, தாம்பரம் 18, மாமல்லபுரம், போளூர்- 17, காஞ்சிபுரம் -15, பெரும்புதூர், நெய் வேலி, நாகை 14, செய்யாறு 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் காலை 8 முதல் நேற்று காலை 8 மணி வரை 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில், நேற்று முன்தினம் இரவு மட்டும் 12 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment