சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு தழுவிய தபால்தலை வடிவமைப்பு போட்டியை தபால்துறை நடத்துகிறது.'இந்தியாவிலுள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய களங்கள் (கலாசாரம்)' என்ற தலைப்பில் புகைப்படங்களை அனுப்ப வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர், தலைப்பு சார்ந்து, ஒரு புகைப்படத்தை, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின், https://www.mygov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பின்றி, அனைவரும் பங்கேற்கலாம். விண்ணப்பத்துடன், புகைப்படம் குறித்து, 50 முதல் 60 வார்த்தைகளில், சுருக்கமான விளக்கமும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.'அனுப்பப்பட்டுள்ள புகைப்படம் முற்றிலும் எனது சொந்த படைப்பு' என்பதற்கான, ஒப்புதல் கடிதத்தையும் இணைக்க வேண்டும்.சிறந்த முதல் மூன்று புகைப்படங்களுக்கு முறையே தலா, ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.
விண்ணப்பங்களை வரும், ஜூலை 27ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டி முடிவுகள், வரும் ஆக.,15ம் தேதி, www.indiapost.gov.in , postagestamps.gov.in ஆகிய தபால்துறை இணையதளங்களில் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment