விண்ணப்பிக்கும் முறைகளும், விண்ணப்பப்படிவங்களும் என்ற நூலை தயாரித்து எழுதிய இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுக்கோட்டை ,நவ.7: பள்ளிகளின்தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள்,அலுவலகப்பணியாளர்கள் பயன்பெறும் வகையில்
பணிவரன்முறை,ஊதிய உயர்வுகள்,தகுதி காண் பருவம்,தேர்வு நிலை விடுப்புகள்,ஓய்வூதியப் பலன்கள்,நிர்வாகப்பணிகள்,பணப்பலன்கள் என பல விவரங்களை உள்ளடக்கிய பல்வேறு சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்த விண்ணப்பிக்கும் முறைகளும்,விண்ணப்ப படிவங்களும் என்ற நூலை இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் தீவிர முயற்சி செய்து தயார் செய்து எழுதினார்.
அதனைத்தொடர்ந்து நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை காரைக்குடியில் நடைபெற்றது. பின்னர் நூலாசிரியரான இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மேல்நிலைக்கல்வி (பொ) ஜீவானந்தம், இடைநிலைக்கல்வி கபிலன்,இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment