தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின்னர் பொதுத்தேர்வு
அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சட்டப்பேரவைத் தேர்தல் வரும்போது கால அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிடும். அந்த அட்டவணை வெளியான பிறகு, தேர்வுகளை நடத்துவது குறித்து முதல்வரிடமும் கல்வியாளர்களிடமும் கலந்து பேச உள்ளோம். அதன்பிறகு பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.
மருத்துவக் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து முதல்வர் பரிசீலிப்பார். ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் முதல்வர் பழனிசாமி ஈரோட்டில் பயணம் மேற்கொள்ள உள்ளார்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் தின திறனாய்வுப் போட்டியில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே கட்டுரைகள் கோரப்பட்டு, தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளதே என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ''தமிழகத்தில் எங்களைப் பொறுத்தவரையில் தமிழும் ஆங்கிலமும்தான் தொடர்பு மொழிகளாகக் கேட்கப்பட வேண்டும். இதுகுறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment