சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் TN EMIS தளத்தில் உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 6, 2022

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் TN EMIS தளத்தில் உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் TN EMIS தளத்தில் உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 68277/ இ/ இ1/ 2021, நாள்: 02-05-2022. 

    மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . சத்துணவு திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு பயனாளிகளின் ஊட்டச்சத்து நிலையினை கண்டறியும் பொருட்டு பள்ளி திறக்கும் போது மாணவ / மாணவியரின் உடல் நிலை குறியீட்டின் படி ( BMI - Body Mass Index ) கணக்கீடுக்களை மேற்கொள்ளுவதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் மீது தனிக் கவனம் செலுத்துவதுடன் உடல் நிலை குறியீட்டின் படி சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்து பிரச்சினைகளை தடுப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இப்பணியின் முக்கிய நோக்கம் ஆகும். 

         எனவே , மேற்காண் பொருள் தொடர்பாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . " சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ மாணவிகளின் தரவுகளை TN - EMIS இல் நாள்தோறும் உள்ளீடு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment