ஆகஸ்ட் 3 - மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 1, 2024

ஆகஸ்ட் 3 - மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஆகஸ்ட் 3 - மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

 தருமபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறுவதையொட்டி ஆடி 18-ஆம் நாளான 03.08.2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் அறிவிக்கப்படுகிறது.

 விடுமுறையாக இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.. 


ஆகஸ்ட்3 சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை : 

 ஆடிப் பெருக்கு மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

 இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்காது என்று தெரிவித்துள்ளார். 


 ஆகஸ்ட் 3 - உள்ளூர் விடுமுறை - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. 

 ஆடிப் பெருக்கு மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்காது என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment