பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் பட்டியல் தயாரிக்க உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, November 14, 2015

பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் பட்டியல் தயாரிக்க உத்தரவு

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, நவ., 16 க்குள் தயாரிக்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 2016 மார்ச்சில் பொது தேர்வு நடத்த தேர்வு துறை ஆயத்தமாகி வருகிறது. இதற்காக தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இதில் மாணவரின் பெயர், போட்டோ, பிறந்த தேதி, தந்தை, தாய் பெயர், ஜாதி, மதம், ஆதார் எண் போன்ற விபரங்கள் இடம்பெறுகின்றன. அந்த பெயர் பட்டியலை மாணவர்கள் சரிபார்த்த பின், வகுப்பு ஆசிரியர் ஒப்புதல் வழங்குகின்றனர். தவறு இல்லாத மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்காக மிக கவனமாக நடந்து வரும் இப்பணியை வரும் நவ., 16 க்குள் முடித்து தேர்வு துறைக்கு அனுப்ப வேண்டும்.

இதேபோல் அடுத்த ஏப்ரலில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பட்டியலையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என அனைத்து மேல்நிலை, மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு பள்ளி கல்வித்தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment