மாணவர் சேர்க்கைக்காக வரம்புக்கு மீறி நன்கொடையை பெறுவோர் மீது, 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் !!
சேர்க்கைக்காக வரம்புக்கு மீறி நன்கொடையை பெறுவோர் மீது, 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும், என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளி குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறுந்தகடு மற்றும் புத்தக வெளியீட்டு விழா, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசுகையில், இவ்வாறு தெரிவித்தார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள மாணவர்கள் இடைநிற்றல் குறித்த புள்ளி விவரங்களை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து வருகிறார்கள், என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், புதிய பாடத்திட்ட பாடங்களை மாணவர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பயிற்சி கையேடு தயாரிக்கும் பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகிறது, என்றும் தெரிவித்தார்.
மேலும், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு, வரம்பு மீறி நன்கொடை வசூலித்தால், 48 மணி நேரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஏப்ரல் மாதத்தில் தான் நடத்தவேண்டும் என்றும், செங்கோட்டையன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment