காணாமல் போன மொபைலை கண்டறிய புதிய App - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 20, 2020

காணாமல் போன மொபைலை கண்டறிய புதிய App

காணாமல் போன மொபைலை கண்டறிய புதிய App
உங்கள் மொபைலை காணவில்லை என்றால் உடனே பதற்றம் அடைய வேண்டாம் , ஒருவேளை அது உங்கள் மிக அருகாமையிலேயே கூட இருக்கலாம் , சைலன்ட் மோடில் இருக்கலாம் .
கடைசி வாய்ப்பாக தான் உங்கள் மொபைல் நிஜமாகவே காணாமல் போயிருக்கலாம் . ஒரு வேளை சைலன்ட் மோடில் இருந்தால் காணாமல் போன மொபைலை கண்டுபிடிப்பது கடினம் .
 
ஜி . பி . எஸ் மூலம் 10-   20 மீட்டர் தொலைவில்  உள்ள மொபைலை கண்டறிய  முடியும் . ஒரு வேளை மொபைல் மூடிய இடத்தில் இருந்தாலும் ஜி . பி . எஸ் மூலம் எளிதாக கண்டுபிடிக்கலாம் . அல்லது போன் வைஃபை  நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருந்தால் MAC முகவரி வைத்து எளிதாக கண்டுபிடிக்கலாம் .
இந்த இரண்டு வழிகளின் மூலம் கண்டுப்பிடிக்கமுடியவில்லை என்றால் android device manager என்ற மொபைல் ஆப்பின் மூலம் காணாமல் போன மொபைல் எங்கு உள்ளது என்பதை தெளிவாக கண்டறிய முடியும் .
1. இதற்கு முதலில் ஆண்ட்ராய்டு கருவியில் பயன்படுத்தும் ஜிமெயில் அக்கவுன்ட் கொண்டு லாக் - இன் செய்ய வேண்டும் .
2 லாக் இன் செய்தவுடன் இங்கு உங்களது அக்கவுன்டில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைலை உங்களால் திரையில் பார்க்க முடியும் .
3. அந்த மொபைல் மாடல் , மொபைலில் எவ்வளவு சார்ஜ் உள்ளது என்பதை காட்டும் . மேலும் எந்த பகுதியில் மொபைல் உள்ளது . அது செயல்பாட்டில் உள்ளதா என்பது போன்ற தகவல்களை வழங்குகிறது .
4. காணாமல் போன மொபைல் சைலண்ட் மோடில் இருந்தால் அதனை இந்த ஆப் மூலம் ரிங் செய்ய இயலும் .
 
5. ஒரு வேளை காணாமல் போன மொபைல் அருகில் இருந்தாலோ அல்லது பைகளில் இருந்தாலோ எளிதாக கண்டுபிடிக்கலாம் .
லாக் அன்டு இரேஸ் என்ற ஆப்ஷன்கள் இருக்கும் . ரிங் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும் . அவ்வாறு செய்தவுடன் உங்களது போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் ரிங் ஆகும் . செயல்திறன்மிக்க மொபைல் டேட்டா அல்லது வைஃபை இணைப்பு இல்லாத மற்றும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த கூகுள் டிவைஸ் மேனேஜர் செயல்படாது .

No comments:

Post a Comment