பள்ளிகளில் ஏப்ரலுக்கு முன்னால் மாணவர் சேர்க்கை நடந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, February 11, 2020

பள்ளிகளில் ஏப்ரலுக்கு முன்னால் மாணவர் சேர்க்கை நடந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் ஏப்ரலுக்கு முன்னால் மாணவர் சேர்க்கை நடந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் 
பள்ளிகளில் நன்கொடை வசூலிக்கப்பட்டாலோ, ஏப்ரலுக்கு முன்னால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்கள் உடல்நலம் தொடர்பான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தனியார் பள்ளிகளில் ஏப்ரலுக்கு முன்னால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல நன்கொடை வசூலிக்கப்பட்டதை ஆதாரத்துடன் தெரிவித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை பாயும்.
தனியார் டியூஷன் மையங்கள் அரசின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவை முறையான அனுமதி பெற்றால் மட்டுமே இயங்க முடியும். மத்திய அரசின் மாணவர் இடைநிற்றல் குறித்த புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து வருகிறோம்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2 comments: