ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் முன்வைத்த 10 அறிவுரைகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 29, 2020

ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் முன்வைத்த 10 அறிவுரைகள்

ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் முன்வைத்த 10 அறிவுரைகள்

மக்கள் வெளியில் வரும்போது நிச்சயமாக தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் பொதுமுடக்கம் நீடிப்பது, மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நிலை தளர்த்தப்படும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி எடுத்துரைத்தார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத் தில் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி , ஏப்ரல் 28ம் தேதி ஆலோசனை நடத்தி இருந்தார். அதனை தொடர்ந்து, இன்று ( ஏப்ரல் 29ம் தேதி) மாவட்ட ஆட்சியர்கள் இடையேயான ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
பின்னர் அவர் பேசியதாவது,
தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து தொற்று பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கரோனா குறைந்த பகுதிகளில் தொழில்கள் துவங்க அரசு தரும் அறிவுரைகளை ஏற்று ஆட்சியர் செயல்படலாம்.
விவசாய பணிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவர்களின் வேளாண் பணிகளுக்கான வாகனத்தை தடுத்து நிறுத்த வேண்டாம். அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் இந்த நோய் தொற்று ஒழிக்கப்படும்.
100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிபவர்கள் 50 வயதுக்கு மேல் இருந்தால், அவர்கள் வேலை வர வேண்டாம்.
முகக்கவசம், தனிநபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைதிட்டத்தை செயல்படுத்த வேண்டும்
சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. இதற்கு காரணம் சென்னை பெரு நகரம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. குறுகலான தெருவில் அதிக மக்கள் வசிக்கும் காரணத்தால் எளிதாக நோய் பரவுகிறது. நகரப்பகுதியில் இருக்கும் கழிப்பறைகளை 3 முறை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். அம்மா உணவகங்கள் மூலம் தரமான உணவு மக்களுக்கு கிடைக்குமா ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
நோய் பாதிப்பு உள்ள பகுதிகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது. பச்சை பகுதி மாவட்டத்தில் படிப்படியாக தொழில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளலாம். சிவப்பு மாவட்டங்களை ஆரஞ்சு மாவட்ட மாகவும், ஆரஞ்சு மாவட்டங்களை பச்சை மாவட்டமாக மாற்ற வேண்டும். அப்போது தான் தொழில்கள் துவங்க முடியும்
காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் தேதி மற்றும் நேரத்தை பொதுமக்களிடம் தெளிவாக சொல்ல வேண்டும்.
மக்கள் வெளியில் வரும்போது நிச்சயமாக தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
முதல்வர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனை கூட்டத்தில், மே 3ம் தேதிக்கு பிறகு ஊடரங்கை நீட்டிப்பது குறித்த முக்கிய ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

No comments:

Post a Comment