கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அசாம், ஆந்திரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் துவங்குகின்றன.
இதுகுறித்து மத்திய அரசு பள்ளிகள் செல்வதற்கு கட்டாயம் பெற்றோரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் வகுப்பறைகளில் தனிநபர் இடைவெளியில் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் ,கிருமி நாசினி பயன்படுத்தி பின்னரே மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெற்றோர் அனுமதி அளித்தால் மட்டும் தான் பள்ளிக்கு வர வேண்டும் இல்லையெனில், பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment