அசத்தும் ஆரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 1, 2021

அசத்தும் ஆரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இராமசாணிகுப்பம்.மேற்கு ஆரணி ஒன்றியம்.திருவண்ணாமலை மாவட்டம் தமிழ் நாடு. தலைமையாசிரியை இரா.தாமரைச்செல்வி அவர் கணவர் க.பிரபாகரன் சமூக ஆர்வலர் இராணுவம் ஓய்வு மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,உயர் அதிகாரிகள் CEO,DEO,BEO,மற்றும் PTA,SMC உறுப்பினர்கள், பெற்றோர்கள்,ஊர் பொது மக்கள் முக்கியமாக முன்னாள் நம் மாவட்ட ஆட்சித்  தலைவர் திரு. K.S.கந்தசாமி இ.ஆ.ப.அவர்களும், இந்து சமய  அறநிலையத் துறை அமைச்சர் திரு.சேவூர் S.இராமச்சந்திரன்  அவர்களும் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முயற்சியால் நம் பள்ளியில் ஒரு ஆண்டில் சுமார் 50,00,000 ரூபாய்  மதிப்பீட்டிற்கு  மேல்  இந்த கொரோனா சமயத்தில் பள்ளிக்கு பல வசதிகள் செய்து இருக்கிறார்கள்.பள்ளி வளாகம் முழுவதும் பேவர்பிளாக் கற்கள்   அமைத்தல்,மாணவர்கள் உணவு அருந்தும் கட்டிடம் அமைத்தல்,மாணவ, மாணவிகளுக்கு தனி,தனி நவின கழிவறைகள் அமைத்தல்,அனைவரையும் கண்ணை கவரும்  விதத்தில்  பகலிலும், இரவிலும்  பார்க்க வைக்கும்  நுழைவு வாயில் அமைத்தல், எல்லா வகுப்பறைக்கும் வண்ணம் தீட்டுதல். இவை அனைத்தும் கொரோனா சமயத்தில் ஒரு ஆண்டில் முடிக்கப்பட்டு  புதுமையாக புதிப்பித்து பள்ளி வளாகம் முழுவதும் அருமையாக காட்சி அளிக்கின்றது.அனைவருக்கும்  பள்ளியின் சார்பாக நன்றிகள் தெரிவித்துக்  கொள்கிறோம். 

No comments:

Post a Comment