திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்
மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் மாநிலப் பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பாராட்டு
புதுக்கோட்டை,மே.2:திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்
மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் மாநிலப் பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டு காலமாக ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு வகைகளில் அஇஅதிமுக அரசால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
மத்திய ஊதியம் வழங்கிட வேண்டும்,புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தினை இரத்து செய்திட வேண்டும், ஏழை,எளிய குழந்தைகளுக்கான தொடக்கப்பள்ளிகளை மூடும் முடிவினைக் கைவிட வேண்டும்,பள்ளிகள் இணைப்புத்திட்டத்தினை கைவிட வேண்டும்,புதியகல்விக்கொள்கையை நிராகரித்திட வேண்டும் என்பன போன்ற பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம்
உள்ளிட்ட அனைத்துவகையான போராட்டங்களையும் தமிழ்நாட்டின் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஒன்றுபட்டு மேற்கொண்டனர்.
ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் காலங்களில் எல்லாம் ,போராடும் ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் இயக்கங்களின் தலைவர்களை அழைத்துப்பேசி,
இணக்கமான முறையில் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதற்கு நேர்மாறாக ,
ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்களின் மீது கடுமையான தாக்குதல்களையும்,
அடக்குமுறைகளையும்
தமிழக அரசு ஏவியது.
இத்தகு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்ட அஇஅதிமுக அரசு, நடைமுறையில் இருந்து வந்த உரிமைகளையும் ஈவு இரக்கமற்ற வகையில் பறித்துக்கொண்டது.
நடைமுறையில் இருந்து வந்த,அனுபவித்து வந்த உரிமைகளை இழந்து தவித்திட்ட ஆசிரியர்கள் -அரசு ஊழியர்கள், அஇஅதிமுக அரசின் மிகமோசமான தாக்குதல்களையும் எதிர்கொண்டு வந்தனர்.
ஆசிரியர்-அரசு ஊழியர்களை எதிரிகள் போலவும்,விரோதிகள் போலவும் நடத்தி வந்த அஇஅதிமுக அரசுக்கு
அனைத்து தரப்பு
மக்களின் ஆதரவோடு தக்க பதிலடி தருவதற்கு காத்திருந்தனர் .
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையும் பெரிதும் விரும்பினர்.
இத்தகு பெரும் விருப்பம் , பெரும் எதிர்பார்ப்பு தமிழக மக்களின் பேராதரவோடு தற்போது நிறைவேறி இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த 06.04.2021 அன்று நடந்து முடிந்துள்ள 16வது தமிழக சட்டமன்றப்பொதுத் தேர்தலில் அறுதிபெரும்பாண்மையோடு வெற்றி பெற்றுள்ள திராவிட முன்னேற்றக்கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அமைச்சரவைக்கும்,
தமிழக அரசுக்கும் பேரன்பு பெரும் வாழ்த்தும்,பெரும் பாராட்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தெரிவித்துக்கொள்கிறது .
மேலும் திராவிடமுன்னேற்றக்கழகத்திற்கு மிகப்பெரும் வெற்றியை வாரி வழங்கி தந்து உள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்
நன்றி பாராட்டுகிறது என தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment