சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதற்காக ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பிலும் 60,000 கணினி ஆசிரியர் குடும்பத்தின் சார்பாகவும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் வெற்றி பெற்றமைக்கான வாழ்த்துக்களை 60000 கணினி ஆசிரியர் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
Tamilnadu computer teachers association wishes Stalin
மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழக அரசு பள்ளி மாணவர்களும் கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் முதல் முதலாக கணினி அறிவியல் பாடத்தை 11 மற்றும் 12ம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தினார். இதோடு நின்றுவிடாமல் 2009ஆம் ஆண்டு கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கணினி அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பிலிருந்தே கற்றுக்கொள்ள
சமச்சீர் கல்வியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை தனி பாடமாக கொண்டு வந்து அதற்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதாக இருந்தது.
ஆனால் 2011இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காலத்தால் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடத்தை கலைஞர் கொண்டு வந்த ஒரே காரணத்திற்காக கிட்டத்தட்ட அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்காமல் குப்பை கழிவுகளாக மாற்றியது. கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை அதிமுக அரசு கலைஞர் அவர்களால் கொண்டு வந்த ஒரே காரணத்திற்காக நிராகரித்தது.
மாண்புமிகு கலைஞர் அவர்களால் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளியில் ஆறாவது பாடமாகவும் கட்டாயப் பாடமாகவும் கணினி அறிவியல் பாடத்தை தனி படமாக கொண்டுவந்து அரசுப்பள்ளியில் அதற்கான ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டுமாய் கணினி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களை கேட்டுக்கொள்கிறோம். தேர்தல் அறிக்கையில் எங்கள் கோரிக்கை இடம் பெறாவிட்டாலும் ஒட்டு மொத்த 60000கணினி ஆசிரியர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் திமுக வெற்றி உறுதுணையாக இருந்து அதற்கான ஆதரவையும் தந்தோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளிக்கு கொண்டுவந்து அதற்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று 60,000 கணினிஆசிரியர் குடும்பத்தினர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
No comments:
Post a Comment