TNPSC - குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிகிறது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 28, 2022

TNPSC - குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிகிறது.

 TNPSC - குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க காலக்கெடு இன்று

நள்ளிரவுடன் முடிகிறது.

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட 30 நாட்கள் காலக்கெடு இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிகிறது. நேற்று மாலை வரை 17.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 17 லட்சத்து 83 ஆயிரத்து 590 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குரூப் 4 தேர்வுக்கு ஜூலை 24ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும்’’ என்றார்.

No comments:

Post a Comment