வருகின்ற 11ஆம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் 'தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 8, 2023

வருகின்ற 11ஆம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் 'தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைப்பு

கல்வி அமைச்சர் நன்றி அறிவிப்பு.

'வருகின்ற 11ஆம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் ' அறிவித்திருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஏ.வா.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோருடன் இணைந்து தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அவர்களின் கோரிக்கைகளை நிச்சயமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் செல்வோம் என உறுதியளித்தோம். அதனை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை  நிறுத்தி வைப்பதாக அறிவித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு நன்றிகள். 

No comments:

Post a Comment