தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையின் முக்கிய அம்சங்கள்
பள்ளிக் கல்வியில் தமிழை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம். தொடக்க நிலை முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ் வழிக் கல்வியை வழங்குதல்.
*இருமொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
*3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் இருக்கக்கூடாது.
*கல்வி மாநில பட்டியலில் வரவேண்டும்.
*நீட் தேர்வு இருக்கக்கூடாது.
*நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப் படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
*கல்லூரி சேர்க்கையின்போது 12ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11ஆம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும்.
*சிபிஎஸ்சி, Deemed University அகியவற்றிக்கான கட்டணங்களை சீரமைபதற்காக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
*ஸ்போக்கன் இங்கிலீஷ்" தவிர "ஸ்போக்கன் தமிழ்" மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.
*அங்கன்வாடி மையங்களுக்கு 'தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்' என பெயரிட வேண்டும்.
*எம்ஜிஆர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்களாக அமைக்க வேண்டும்.
*5 வயது பூர்த்தியாளர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும்
*11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும்.
*தமிழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும்.
*தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரிகள் தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
*கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
*இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
*போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஆட்சியர் தலைமையில், 1 மனநல ஆலோசகர், 1சுகாதார அதிகாரி, 1 போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 1 உறுப்பினர் ஆகியோரைக் கொண்ட தனிக் குழு அமைக்கலாம்.
*தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப் பள்ளிகள் நர்சரிகள், மழலையர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்படும்
No comments:
Post a Comment