கணினி ஆசிரியர்கள் பி.எட் கல்விச் சான்றிதழ்களை தமிழக அரசிடம் ஒப்படைப்பு.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 24, 2024

கணினி ஆசிரியர்கள் பி.எட் கல்விச் சான்றிதழ்களை தமிழக அரசிடம் ஒப்படைப்பு..

கணினி ஆசிரியர்கள் பி.எட் கல்விச் சான்றிதழ்களை தமிழக அரசிடம் ஒப்படைப்பு..

இடம்: பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் சென்னை.

நாள்:1.10.2024.

நேரம்:10.06 காலை. 

"கணினி ஆசிரியர்கள் எங்கள் பி.எட கல்வி சான்றிதழை தமிழக  அரசிடமே திருப்பி கொடுக்கின்றோம்"

அரசுப் பள்ளிகளில் உயர்தர கணினி ஆய்வகங்கள்( ஹைடெக் லேப்) மேல்நிலை உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நிறுவவும் அதற்கான கணினி பயிற்றுநர்களை நியமனம் செய்யவும் மத்திய அரசு Samagra Shiksha திட்டத்தின் கீழ் நிதி வழங்கி வருகின்றது.

இதனைப் பெற்றுக் கொண்ட மாநில அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 10 கணினியும், மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினியும் கொண்டு ஆய்வகங்களை நிறுவியுள்ளது ஆனால் இங்கு கணினி பயிற்றுநர் நியமனம் செய்யப்படவில்லை.

மத்திய அரசு வழங்கிய கணினி பயிற்றுநர்கள் பணி விபரம்.

(Administrator cum instructor).

1. அந்தந்த மாநில பாடநூல் கழகத்தின் வாயிலாக கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வர வேண்டும்.

2. கணினி அறிவியல் பாடத்தை பாடமாகவும் செய்முறை பயிற்சியாகவும் மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்.

3. கணினி அறிவியல் பாடத்திற்கு என பாட வேலைகள் தனியாக தலைமையாசிரியர் ஒதுக்கி தர வேண்டும்.

4. கணினி ஆய்வகங்களை மேலாண்மை செய்ய வேண்டும்.

தற்போது 8209 அரசு மற்றும் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளிகளில் கேரள மாநிலத்தின் கெல்ட்ரான்  நிறுவனத்திற்கு 1076 கோடி ரூபாயில் டெண்டர் வாயிலாக கணினி மற்றும் கணினி சார்ந்த உபகரணங்கள் ஸ்மார்ட் போர்டு ,டேப் போன்றவற்றை டென்டருக்கு வழங்கியது மட்டுமல்லாமல் கணினி பயிற்றுனர் நியமனத்தையும் கெல்ட்ரான் நிறுவனத்திற்கே வழங்கியுள்ளது.

கெல்ட்ரான் நிறுவனத்தின் மூலம் நடுநிலைப் பள்ளிகளின் நியமிக்கப்பட்ட கணினி பயிற்றுநர்கள் 96% இல்லம் தேடி கல்வியில்  பணிபுரிந்தவர்கள் இவர்களின் அடிப்படைக் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே. இவர்களை ஓரிரு மாத கம்ப்யூட்டர் சார்ந்த certificate course (dca,pgdca)வைத்துக்கொண்டு

" Administrator cum instructor" பணிக்கு நியமனம் செய்துள்ளனர்.

Administrator cum instructor

தலையாய பணி கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுப்பது மட்டுமே ஆனால் மத்திய அரசு சொன்னதை எதையும் பொருட்படுத்தாமல் மாநில அரசு EMIs பணி செய்ய மட்டும் இவர்களை நியமனம் செய்துள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 60,000 மேற்பட்டோர் கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் பட்டம் பெற்றிருந்த போதிலும் கணினி பயிற்றுநர் பணிக்கு இவர்களை நியமிக்காமல் அவசரக்கோலத்தில் ஆசிரியர்களுக்காக வந்த நிதியை அலுவலக பணிக்கு பயன்படுத்தி விட்டனர்.

மற்ற மாநிலங்களின் நிலை ICT:

Samagra Shiksha திட்டத்தின் கீழ் உயர்தர கணினி ஆய்வகங்கள் அமைத்து கணினி அறிவியல் பாட புத்தகமும் தனி பாடப்புத்தமாக வழங்கி கணினி அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை முறையான பாடத்திட்டம் கொண்டு கற்பிக்கப்படுகிறது.

கேரள மாநிலத்தில் இதற்கும் ஒரு படி மிஞ்சி ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தைக் கொண்டு வந்து அரசு பொது தேர்வுகளிலும் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தருகிறது. மத்திய அரசு கணினி பயிற்றுநர்களுக்கு ஆண்டுதோறும் ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வழங்குகிறது இதோடு மாநில அரசும் இணைந்து கணினி பயிற்றுநர்களுக்கு சம்பளம் தருகிறது.

ஆனால் தமிழக அரசோ கணினி அறிவியல் பாடத்தை தனி பாடமாக கொண்டு வராமல் அறிவியல் பாடத்துடன் இணைப்பாக பயன்படுத்துகிறது. இதுவரை எந்த அரசு உயர்நிலை  பள்ளிகளும் கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்யவில்லை. கணினி அறிவியல் பாடமும் இல்லை பாட வேலைகளும் இல்லை.

தற்போது நடுநிலைப் பள்ளிகளில் தொடங்காத ஆய்வகத்திற்கு  பயிற்றுனர்கள் என்ற பெயரில் Emis OPERATOR பணிக்காக ஆட்களை தனியார் நிறுவனத்தின் வாயிலாக நியமனம் செய்துள்ளது.

2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கணினி பயிற்றுனர் பணியிடங்களை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே கணினி அறிவியல் பாடத்தில் பி.எட்  படித்தவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

தற்போது ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு கணினி பயிற்றுநர்கள் நியமிக்கவில்லை நடுநிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டவர்கள் முறையான கல்வி தகுதி இல்லாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு கணினி அறிவியல் கல்விக்காக வழங்குகின்ற நிதியை முறையாக பயன்படுத்தி  அரசுப்பள்ளி மாணவர்களின் கணினி கல்வியை கருத்தில் கொண்டு.   மற்ற  மாநிலங்கள் உள்ளது போன்று கணினி அறிவியல் பாடத்தை தனி பாடமாக கொண்டு வந்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் கணினிக் கல்வி கிடைக்கப்பெற வேண்டும். கணினி பாடத்திற்கென்று தனி பாட வேலைகளும் பாட புத்தகங்களும் விரைவில் மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும்.

மத்திய அரசு நிதி வழங்கும் கணினி பயிற்றுநர்கள் எண்ணிக்கை:

மத்திய அரசு Samgra Shiksha ICT (Information and Communication Technology).

 திட்டத்தின் கீழ் Hi tech lab,Administrator cum instructor எண்ணிக்கை.

மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளில் 6454.

நடுநிலைப் பள்ளிகளில்

8209.

மொத்தம் மத்திய அரசு 14663 கணினி ஆய்வகம் மற்றும் கணினி பயிற்றுநர்களை நியமிக்க மத்திய அரசு நிதி வழங்குகிறது.

கணினி ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடிய பணியை மத்திய அரசு நிதி தந்த போதிலும் மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்யாமல் ஏற்கனவே பணியில் இருக்கும் ஆய்வு உதவியாளருக்கும்,

நடுநிலைப் பள்ளிகளில் 8209 பணியிடங்களை இல்லம் தேடி  கல்வியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் கணினி பயிற்றுநர் பணியிடத்தை அரசு வழங்கியுள்ளது.

இதனால் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகங்களில் முறையாக பி.எட்  பயின்ற 60000 கணினி ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. 

1, கணினி ஆசிரியர்களுக்கு எந்த ஒரு பணி வாய்ப்பிலும்  மறுக்கப்படுகிறது.

2. 2011 ஆம் 12ஆம் கல்வியாண்டில

பகுதி நேர  கணினி ஆசிரியர் பணியிடங்களில் கூட கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது.

3.Tet போன்ற ஆசிரியர் தகுதி தேர்வுகளும் கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாமல்Deo, Beo தேர்வுகளிலும் கணினி ஆசிரியர்கள் தேர்வு எழுத அனுமதி இல்லை.

4.  மத்திய அரசு 14,000 கணினி ஆய்வகங்களுக்கு 14,000 கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்ய நீதித் தந்துள்ளது. இதனைப் பெற்றுக் கொண்டு 60,000 ஆசிரியர்கள் இருக்கும் பொழுது அவுட்சோர்ஸில் ஆட்களை நியமனம் செய்தது தமிழக அரசு. எனவே கணினி ஆசிரியர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாததால் நாங்கள் பயின்ற கல்விச் சான்றிதழை அரசுக்கே திருப்பி அனுப்பி விடுகிறோம்.

திரு. சசிகுமார்,

மாநிலத் தலைவர்,

94884 45656.

வெ.குமரேசன்,

மாநிலப் பொதுச் செயலாளர் ,

9626545446 ,


தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

No comments:

Post a Comment