தேர்வு நிலைக்கு பணிவரன் முறை நாளில் இருந்து " *பத்தாண்டு பணி* " என்பது நாம் அறிந்ததே.... தற்போது சிலருக்கு எழும் கேள்விக்கான ? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 30, 2024

தேர்வு நிலைக்கு பணிவரன் முறை நாளில் இருந்து " *பத்தாண்டு பணி* " என்பது நாம் அறிந்ததே.... தற்போது சிலருக்கு எழும் கேள்விக்கான ?

நண்பர்களே வணக்கம் 🙏
1/9/14 PG நியமனம்
26/9/14 TET BT நியமனம்

தற்போது இவர்களுக்கு " *தேர்வு நிலை* " ...

தேர்வு நிலைக்கு பணிவரன் முறை நாளில் இருந்து " *பத்தாண்டு பணி* " என்பது நாம் அறிந்ததே....

தற்போது சிலருக்கு எழும் கேள்விக்கான ?

பதில்கள் ☺️

1)  மருத்துவச் சான்றில்லா ஊதியமில்லா விடுப்பு எடுத்தால் *மட்டுமே* தேர்வு நிலை தள்ளிப் போகும்..
( *LLP with out MC* )

2) *LLP with MC* எனில் தேர்வு நிலை தள்ளிப் *போகாது* ...

3) தகுதி காண் பருவத்தில் *மகப்பேறு* எடுத்து இருந்தாலும் *தேர்வு நிலை* தள்ளிப் *போகாது* ..

4) தகுதி காண் பருவத்தில் *EL / ஈட்டிய* விடுப்பு எடுத்தாலும் தேர்வு நிலை *தள்ளிப் போகாது* ...

5) தகுதி காண் பருவத்தில் மருத்துவ விடுப்பு அனுமதி இல்லை... 

ஆனால் 
EL 
LLP with MC 
LLP without MC அனுமதிக்கலாம்...
அப்படி இருந்தால்
கட்டாயம் " *தகுதி காண் பருவம்" தள்ளிப் போகும்* ...

6) தகுதி காண் பருவம் தள்ளிப் போனதால்...
தேர்வு நிலையும் தள்ளிப் போகும் என நினைக்கிறார்கள்...
அப்படி அல்ல...
 *LLP with out MC* க்கு மட்டுமே தேர்வு நிலை தள்ளிப் போகும்.

7) போராட்ட காலம் *முறைப்படுத்தல்* - எனில் தேர்வு நிலை தள்ளிப் போகாது..

8) போராட்ட நாள்கள் *முறைப்படுத்தப்பட வில்லை* எனில் தேர்வு நிலை *தள்ளிப் போகும்* ...

9) புரிதலுக்காக வழக்கமான *ஆண்டு ஊதிய உயர்வு* தள்ளிப் *போயிருந்தால்* மட்டுமே தேர்வு நிலையும் *தள்ளிப் போகும்* . ( பார்க்க *இணைப்பு* - இதில் LLP with out MC மட்டுமே அதிக வாய்ப்பு உள்ளது)

10) பணியில் சேர்ந்தது *பிற்பகல்* எனில் அடுத்த நாள் முதல் ஊதியம்/பணிக்காலம் *கணக்கீடு* துவங்கும்...

உம் - 26/9/14 பிப பணியேற்பு எனில்..
27/9/14 முதல் தான் பணிக்காலம் துவக்கம்...
தேர்வு நிலை 27/9/24..

 *பத்தாண்டு* பணி காலத்தை முடிக்கும் சகோதர சகோதரிகளுக்கு *வாழ்த்துகள்* 🙏

தகவலுக்காக 
 *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், திருப்பத்தூர்*

No comments:

Post a Comment