பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உட்பட 38 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, February 9, 2025

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உட்பட 38 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு...

 பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உட்பட 38 ஐஏஎஸ் அலுவலர்கள்

பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு...

தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: கைத்தறித்துறை இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமாரும், பால் உற்பத்தியாளர் மற்றும் பால் பண்ணை மேம்பாடு ஆணையரகத்தின் ஆணையராக அண்ணாதுரையும் நியமிக்கப்பட்டுள்ளனர். வினித் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளராக கலையரசி நியமிக்கப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட நலத்துறை ஆணையராக சுரேஷ்குமாரும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிக ஆணையராக ஆபிரகாம் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குநராக கிரன் குராலா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்விசை உற்பத்தி கழகத்தின் மேலாண்மை இயக்குநராக அல்பி ஜான் வர்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக அன்சூல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநராக கிராந்தி குமார் பாடியும், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக பவன் குமார் கிரியப்பனவரும், தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலாளராக ஷஜிவனாவும், செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர், வளர்ச்சி திட்ட அலுவலராக நாராயண சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக சங்கத் பல்வந்த் வாகே மற்றும் சேலம் மாவட்ட வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலராக பொன்மணி நியமிக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும், கூடுதல் ஆட்சியராகவும் கேத்தரின் சரண்யா, ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும், கூடுதல் ஆட்சியராகவும் அர்பித் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரகத்தின் ஆணையராக ஹர் சகாய் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறை அரசு செயலாளராக மதுமதியும், உயர் கல்வித் துறை அரசு செயலாளராக சமய மூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அரசு முதன்மைச் செயலாளராக சத்ய பிரத சாகுவும், தமிழ்நாடு மின்வாரியம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், மின்விசை உற்பத்திக் கழகம் ஆகியவற்றின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாற்றப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment