TTNEWS: Article

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Showing posts with label Article. Show all posts

Tuesday, September 12, 2023

தமிழக அளவிலான செஸ் போட்டிக்கு தொடர்ந்து 7-வது ஆண்டாக தகுதிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்!மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தொடர்ந்து 7-வது ஆண்டாக அ.செட்டியார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் தகுதி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.  பள்ளிக் கல்வித் துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 11 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 5-ம் வகுப்பு மாணவி க.வேதாஸ்ரீ முதலிடம் பெற்றார். இதன் மூலம் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். தொடர்ந்து 7-வது ஆண்டாக இப்பள்ளி மாணவர்கள் சதுரங்க போட்டிக்கு தகுதி பெற்று சாதனை புரிந்து வருகின்றனர்.  அதேபோல், இப்பள்ளி வளாகத்திலுள்ள அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் மோ.சந்தோஷ் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். 9-ம் வகுப்பு மாணவி அ.சோலையம்மாள் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் 2-ம் இடம் பெற்றார்.  பள்ளிக் கல்வித் துறையின் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் 7-வது ஆண்டாக பங்கேற்கும் மாணவர்களை அ.வல்லாளப்பட்டி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.வினோத், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை மு.மணிமேகலை, இப்பள்ளி இடைநிலை ஆசிரியரும், சதுரங்க பயிற்சியாளருமான ஞா.செந்தில்குமார், அ.வல்லாளப்பட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கண்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் சேதுபதி ராஜா, அறிவரசன் ஆகியோர் பாராட்டினர்.

September 12, 2023 0 Comments
தமிழக அளவிலான செஸ் போட்டிக்கு தொடர்ந்து 7-வது ஆண்டாக
Read More
4th , 5th Summative Assessment Question Paper - EE World Book தொகுத்தறி மதிப்பீட்டு வினாத் தாள்