அசத்தும் அரசு பள்ளி - வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பெரியதாமல் செருவு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று ஆங்கில இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது.
ஆசிரியர்கள் தொடர்ந்து மாதம் தோறும் பல்வேறு விழாக்கள், போட்டிகள் நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி பல்வேறு பரிசுகளை வழங்கி தனித்திறன்களை வெளிக்கொண்டு வருகின்றனர்....
எட்டாம் வகுப்பு அறிவியல் பாடம் வெப்பம்.பதங்கமாதல்.சோதனை.

4 மற்றும் 5 வகுப்பு மாணவர்கள் ஜிபிஎஸ்(GPS) என்பதன் ஆங்கில விளக்கம் Global Positioning System செய்முறை விளக்கத்தினை ஆசிரியர்.ஹரிஹரன் செய்து காட்டினர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு பேர்ணாம்பட்டு தீயணைப்புத்துறை மீட்பு பணியினர் பள்ளி மாணவர்களுக்கு தீத்தடுக்கும் முறைகள், மழை வெள்ள காலங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஒத்திகை பயிற்சி
தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்தி வரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கும், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களுக்கும், பேர்ணாம்பட்டு வட்டார கல்வி அலுவலர் இருவருக்கும், பேர்ணாம்பட்டு வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவருக்கும் எங்கள் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்....
வாழ்த்துங்கள்...... வளர்கிறோம்.......... நன்றி
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்போம்! அகன்ற அறிவை பெறுவோம்!
No comments:
Post a Comment