அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரம் மற்றும் பப்பாளிச்செடி வளர்க்கப்பட உள்ளதாக கலெக்டர் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, March 22, 2018

அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரம் மற்றும் பப்பாளிச்செடி வளர்க்கப்பட உள்ளதாக கலெக்டர் அறிவிப்பு

அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரம் மற்றும் பப்பாளிச்செடி வளர்க்கப்பட உள்ளதாக கலெக்டர் அறிவிப்பு
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சத்துணவு, அங்கன்வாடி  மையங்களில் முருங்கை மரம் மற்றும் பப்பாளிச்செடி வளர்க்கப்பட உள்ளதாக சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வெளியிட்ட செய்தி குறிப்பு: தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் தோட்டக்கலை சாராத நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தோட்டக்கலையை ஊக்கப்படுத்தும் நோக்கத்துக்காக 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 இதன் கீழ் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மரக்கன்றுகள், வணிக மலர்ச் செடிகள் 40 சதவீதம் மானியத்தில் நடவு செய்து வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து சமூகநலத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளும், பழங்களும் கிடைக்கும் வகையில் முருங்கை, பப்பாளி செடிகளை நடவு செய்து வளர்க்க இடம் வசதியுள்ள அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 அதற்காக, அனைத்து அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களுக்கும் முருங்கை மற்றும் பப்பாளிச் செடிகள் வழங்குவதற்காக அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இச்செடிகளின் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இத்திட்டத்தின் கீழ் 42,795 சத்துணவு மையங்களுக்கு 78,347 பப்பாளி மற்றும் 73,527 முருங்கை கன்றுகள் விநியோகிக்கப்பட உள்ளன.
 எனவே முருங்கை மற்றும் பப்பாளி வளர்ப்பதற்கு இடவசதியுள்ள அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையயங்கள் அந்தந்த மாவட்ட சமூகநலத்துறையின் வழியாக மாவட்ட தோட்டக்கலை இணை, துணை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது


No comments:

Post a Comment