ராணுவத்தினர் குழந்தைகளின் கல்வி செலவு வரம்பு நீக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, March 23, 2018

ராணுவத்தினர் குழந்தைகளின் கல்வி செலவு வரம்பு நீக்கம்

ராணுவத்தினர் குழந்தைகளின் கல்வி செலவு வரம்பு நீக்கம்
போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுக்கான வரம்பு நீக்கப்பட்டுள்ளது.கடந்த, 1971 முதல், போரில் உயிர் நீத்த, ஊனமுற்ற, காணாமல் போன ராணுவ வீரர்களின் குழந்தைகளின் பள்ளிக் கல்வி முதல், தொழில் முறை படிப்பு வரையிலான, கல்விக் கட்டணம், சீருடை, விடுதிச் செலவு முழுவதையும், மத்திய அரசு ஏற்றது.


ஏழாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைப்படி, உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர கல்வி உதவித் தொகை, 10 ஆயிரம் ரூபாயாக, 2017ல், அறிவிக்கப்பட்டது.  
இதில், கல்விக் கட்டணம், சீருடை மற்றும் தங்குமிடச் செலவும் அடங்கும்.ராணுவ அமைச்சகத்தின் இந்த உத்தரவால், ராணுவத்தினர் அதிருப்தி அடைந்தனர். 'இந்த வரம்பை நீக்க வேண்டும்' என, அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை வரம்பு நீக்கப்படுவதாக, ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.மேலும், போரில் உயிர் நீத்த, ராணுவத்தைச் சேர்ந்த, உயர் அதிகாரி முதல், ஜவான்கள் வரை அனைவருக்கும், இந்த சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment