ஏன் phonetic முறையில் ஆங்கிலம் கற்க வேண்டும்?
நம்ம ஊர் கிராமத்துக் குழந்தைகள் எளிதில் புரிந்து
கொள்வார்கள்.
இடைநிலைப் பயிற்சி மட்டும் பெற்றிருந்தால் கூட ஆசிரியர்கள் கவலைப்படத் தேவை இல்லை, எளிதாகக் கற்றுக் கொடுக்கலாம்.
Sounds மூலம் எழுத்துக் கூட்டி வாசிக்க முடியும்.CAT என்பதை சாதாரணமாக எழுத்துக் கூட்டி வாசித்தால் CசிAஏTட்டி (சியேட்டி)என்று தானே சொல்ல முடியும். ஆனால் sounds மூலம் வாசித்தால் இதைச் சரியாக உச்சரிக்க முடியும்.
தொடக்க நிலை வகுப்புகளில் strong foundation இருந்தால் தான்,புரிந்து படித்தால் தான் பிற பாடங்களை ,மேல் வகுப்புகளைத் தடையில்லாமல் கடந்து செல்ல முடியும்.
JOLLY PHONICS என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான கட்டணத்தில் தனியார் பள்ளிகளில் இதைத் தான் smart board,hi- tech என்ற பெயரில் சொல்லித் தருகிறார்கள்.
இதை பல creative ideas,Games வோடு சேர்ந்து கற்பிக்க supporting materials நிறையவே Googleல் கிடைக்கும்.புதிதாக கூட உருவாக்கத் தேவையில்லை.
No comments:
Post a Comment