பெற்றோரிடம் இருந்து கல்விக் கட்டணம் தவிர கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 29, 2018

பெற்றோரிடம் இருந்து கல்விக் கட்டணம் தவிர கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை:

பெற்றோரிடம் இருந்து கல்விக் கட்டணம் தவிர கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை:
மெட்ரிக் பள்ளி இயக்குநர் கண்ணப்பன் எச்சரிக்கை

பெற்றோரிடம் இருந்து கல்விக் கட்டணம் தவிர கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும். மேலும்,சிறப்பு அதிகாரிகளை நியமித்து பள்ளியை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளி இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.


சென்னையை  அடுத்த குரோம் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் களது பெற்றோர் ரூ.2 லட்சம் கட்டவேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்தது.
இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத் துக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டு, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, தனியார் பள்ளிகள் அதாவது சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் செயல் படும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் மெட்ரிக் பள்ளி இயக்குநர் புதிய அறி வறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழகத்தில் உள்ள சில தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து கல்விக்கட்டணம் தவிர இதர வகையில் கட்டணங் களை பெற்றுக் கொண்டு, தற் போது பள்ளியை மூடிவிடுவதாக மிரட்டி வரும் தகவல்கள் இயக்கு நரகத்துக்கு வந்துள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்டத்தில், திடீரென மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பாதுகாப்பதற்கென தனி வழிமுறைகள் வகுக்கப்பட் டுள்ளன.
தேவையான முன்னேற்பாடுகள்
எனவே, சமூகம், அறக்கட்டளை யால் நடத்தப்படும் கல்வி நிறு வனங்களை மூடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை முதன்மை கல்வி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அறி வுறுத்தவேண்டும்.  மூடுவதற்கு முன்னதாக பல்வேறு முன்னேற் பாடுகளை செய்ய வேண்டும்.
இதற்கான பல்வேறு நடை முறைகள் தனியார் பள்ளிகள் முறைப்படுத்தும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளிக்கல்வி இயக்குநர் அல்லது, பள்ளி நிர்வாகத்தால் அரசு திருப்திபடும்படியான காரணங்களுடன் அறிக்கை அளிக்கப் பட வேண்டும். இவ்வாறு அளிக் கப்படும் பட்சத்தில், அந்த கல்வி நிறுவனத்தின் மேலாண்மை பொறுப்பை மாற்றி அமைக்க, ஓராண்டுக்கு மிகாத வகையில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார்.
மாணவர்களின் கல்வி
அரசால் அமைக்கப்படும் உரிய  அமைப்பின் முன் அனுமதியின்றி பள்ளி மூடப்படும் பட்சத்தில், அப்பள்ளியில் படிக்கும் மாணவர் கள் கல்வியை குறிப்பிட்ட காலத்துக்கு தொடர வேண்டிய ஏற்பாடு கள் செய்யப்பட வேண்டும்.
ஒரு பள்ளி மூடப்படும் பட்சத்தில், அந்த பள்ளி அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் மாணவர் களின் கல்வி வாய்ப்பு பறிபோக வாய்ப்பு ஏற்படும். இது போன்ற சூழலில் பள்ளியை மூட அனு மதியளிக்கப்பட மாட்டாது. அவ்வாறு அனுமதியளிக்கப்படாத சூழலில், சம்பந்தப்பட்ட நிர்வாகம் தொடர்ந்து பள்ளியை நடத்த வேண்டும்.
அறக்கட்டளை அல்லது சமூகஅமைப்பால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு, பொதுமக்களால் வழங்கப்பட்ட நன் கொடைகள், சொத்துகள் இருப்பின், அவற்றை வேறு எந்த உபயோகத்துக்கும் பயன்படுத்தக் கூடாது. அந்த சொத்துகள், நன்கொடைகள் கல்வி உபயோகத் துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
கல்வி வியாபாரமல்ல...
மத்திய இடைநிலை கல்வி கழகம் (சிபிஎஸ்இ) அனுமதி பெற்று பள்ளிகளை நடத்தும் சமூக அமைப்புகள், அறக்கட்டளைகள், சமூக சேவையாக மட்டுமே கல்வியை வழங்க வேண்டும். அதை வியாபாரமாகவோ, வர்த்த கமாகவோ மாற்றிவிடக்கூடாது. பெறப்படும் தொகையானது பள்ளிக்காகவும், அதன் நன்மைக் காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
தனிப்பட்ட பயன்பாட்டுக்கு பள்ளிக்கு வரும் கட்டணத்தை பயன்படுத்தக்கூடாது.  மேலும், மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்குவதற்காக பள்ளியின் பெயரில் எவ்வித கூடுதல் கட்டணம், நன்கொடை உள்ளிட்டவற்றை வாங்கக் கூடாது. அவ்வாறு அறிந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, முதன்மை கல்வி அலுவலர்கள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் அதிகப்படியான நிதி பெறுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறு நிதியைப் பெற்று கல்வி தவிர வேறு பணிகளுக்குப் பயன்படுத்தினால், அந்தப் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். சிறப்பு அதிகாரியை நியமித்து, பள்ளியை நிர்வகிக்க வேண்டும். இதுதொடர்பாக பெற்றோருக்கும் அறிவுறுத்த வேண்டும். அதேபோல், கல்வி நிறுவனங்களும் இதுபோன்ற மிரட்டல்கள் விடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment