10ம் வகுப்பு வாரிய தேர்வை எழுதும் 12 வயது சிறுமி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, October 27, 2018

10ம் வகுப்பு வாரிய தேர்வை எழுதும் 12 வயது சிறுமி



மேற்கு வங்காளத்தில் 10ம் வகுப்பு வாரிய தேர்வை எழுதும் 12 வயது சிறுமி

மேற்கு வங்காளத்தில் ஹவுரா மாவட்டத்தினை சேர்ந்த சிறுமி சைபா கதூன் (வயது 12).  இவர், மேற்கு வங்காள மேனிலை கல்வி வாரியம் நடத்த உள்ள 2019ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்வதற்காக தயாரானார்.  இதற்காக பள்ளி கூடத்திற்கு சென்று முறைப்படி படிக்காமல் வீட்டிலேயே படித்து வந்துள்ளார்.

அதன்பின்னர் கடந்த ஆகஸ்டில் நடந்த 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கான தகுதி தேர்வில் கலந்து கொண்டார்.  இதன் முடிவுகள் கடந்த 11ந்தேதி வெளியானது.  இதில் 52 சதவீதம் மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.  இதனை அடுத்து வெளிநபர் தேர்வாளராக அவர் 10ம் வகுப்பு வாரிய தேர்வினை எழுதுகிறார்.

இந்த தேர்வை எழுதுவதற்கு குறைந்தபட்ச வயது தகுதி 14 ஆகும்.  கடந்த 1990ம் ஆண்டு தொடக்கத்தில் வெளிநபர் தேர்வாளர் ஒருவர் குறைந்தபட்ச வயதுக்கு முன் தேர்வு எழுதினார்.  இந்த நிலையில், கடந்த 20 வருடங்களுக்கு பின்னர் 12 வயது நிறைந்த சிறுமி கதூன் இந்த தேர்வை எழுத தகுதி பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment