அரசு மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 29, 2018

அரசு மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி

அரசு மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி
பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், பட்டயக்கணக்காளர் (ஆடிட்டர்) பணிக்கான தேர்வை எழுத பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்தபயிற்சி அளிப்பதற்காக, அடுத்தமாதம் 15-ம் தேதி முதல் மாவட்டத்துக்கு 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மாநிலம்முழுவதும் 23 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிஅளிக்கப்படும். ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம் வழங்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு தொடங்கும் மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 2-வதாக ஆங்கிலம் பாடம் இடம்பெறும். ஜனவரி முதல் தேதியில் இருந்து 52ஆயிரம் குழந்தைகளுக்கு மழலையர் பாடத்திட்டம் மூலம் பாடம் கற்பிக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். வரலாறு, அறிவியல் பாடத்தில் பழைய பாடத்திட்டத்தில் உள்ள அனைத்தும் இடம்பெறும். அது தவிர வளர்ந்து வரும் நவீனஉலகத்துக்கு ஏற்ப, மத்தியஅரசு கொண்டு வரும் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படும் என்றார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், பட்டயக்கணக்காளர் (ஆடிட்டர்) பணிக்கான தேர்வை எழுத பயிற்சி வழங்கப்பட உள்ளது.


No comments:

Post a Comment