ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் "மொபைல் மருத்துவ முகாம்"ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, October 27, 2018

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் "மொபைல் மருத்துவ முகாம்"ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியர்

பத்தலபல்லி ஊராட்சி  ஒன்றிய தொடக்கப் பள்ளியில் "மொபைல்
மருத்துவ முகாம்"ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியர்
வேலூர் மாவட்டம்  பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலபல்லி கிராமத்தில் ஊராட்சி  ஒன்றிய தொடக்கப் பள்ளியில் "மொபைல் மருத்துவ முகாம்"நடைப்பெற்றது.

இந்த கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மர்ம காய்ச்சல் அதிகம் பரவி வரும் நிலையில் மாணவர்கள் காய்ச்சலால் பள்ளிக்கு வரவில்லை என்பதால் பள்ளியின்  தலைமை ஆசிரியர்  பொன்.வள்ளுவன் உடனடியாக டி.டி.மோட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் திரு. சிவக்குமார் அவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் டாக்டர்.சிவக்குமார் மற்றும் டாக்டர்.கார்த்திக் தலைமையிலான மருத்துவ குழுவினர் பள்ளிக்கு வந்தனர்.
பள்ளிக்கு வராமல் காய்ச்சலால் அவதி பட்டு வந்த மாணவர்களுக்கு தகவல் கொடுத்து 
தாய்மார்கள் உடன் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து மொபைல் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளச் செய்து தேவையான மாத்திரைகளையும் வழங்கினார்கள்.

சில மாணவர்களுக்கு தொடர் சிகிச்சை மற்றும் ரத்த பரிசோதனை செய்து கொள்ள பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கும் செல்லுமாறு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.
ஏழை எளியோர் மருத்துவ சிகிச்சைக்காக மணி கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த பள்ளி  தலைமை ஆசிரியரை 
பெற்றோர்களும், கிராம மக்களும் பாராட்டினர்.

No comments:

Post a Comment