கடன் தவணை சலுகை பயன்படுத்தியவர்களில் வட்டிக்கு வட்டி தள்ளுபடியால் யாருக்கு லாபம்? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 6, 2020

கடன் தவணை சலுகை பயன்படுத்தியவர்களில் வட்டிக்கு வட்டி தள்ளுபடியால் யாருக்கு லாபம்?

கொரோனா ஊரடங்கால் தொழில்துறைகள் முடங்கியதால், ஏராளமானோர் வேலை இழந்தனர். அன்றாடச் செலவுகளுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது. அதிலும், கடன் தவணை செலுத்துவோர் நிலை மிகவும் பரிதாபமாகி விட்டது. இந்தச் சூழ்நிலையில்தான், கடன் தவணை ஒத்திவைப்புச் சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்தது. முதலில் மார்ச் முதல் மே வரையிலும், பின்னர் மேலும் 3 மாதங்கள் நீட்டித்து ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும் என மொத்தம் 6 மாதங்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டது. ஆனால், இந்தச் சலுகையைப் பயன்படுத்தியவர்களுக்கு, தவணை செலுத்தாத 6 மாதங்களுக்கும் சேர்த்து வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என வங்கிகள் தெரிவித்தன. 

இதனால், இந்தச் சலுகையைப் பயன்படுத்திய பொதுமக்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்தன.
இதைத்தொடர்ந்து, 'வட்டிக்கு வட்டி' உத்தரவை தள்ளுபடி செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, 'ரூ.2 கோடி வரை கடன் வாங்கிய தனி நபர்கள், நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட அனைத்துத் தரப்புக்கும் இதுவரை செலுத்தாத 6 மாதத் தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது. 

தொழில் நிறுவனங்கள், கல்விக்கடன், வீட்டு வசதிக்கடன், கிரெடிட் கார்டு கடன்கள் உள்ளிட்டவற்றுக்கு இது பொருந்தும். இதற்கான அனுமதி, நாடாளுமன்றத்தில் விரைவில் பெறப்படும்' எனத் தெரிவித்தது. இந்நிலையில், மேற்கண்ட அறிவிப்பால் யாருக்கு லாபம் என வங்கி அதிகாரிகள் சிலர் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ஒருவர் 2015ம் ஆண்டு மார்ச் மாதம், 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும் வகையில் ரூ.2 கோடி வீட்டுக்கடன் வாங்கியிருப்பதாக வைத்துக் கொள்வோம். கடந்த மார்ச் மாதம் கடன் தவணை ஒத்திவைப்புச் சலுகையை அறிவித்தபோது அவரது கடன் நிலுவை சுமார் ரூ.1.75 கோடிக்குமேல் இருக்கும். 

கடன் தவணை சலுகை 6 மாதத்தில் 8 சதவீத சாதாரண வட்டி போட்டால் ரூ.7 லட்சத்தை அவர் செலுத்த வேண்டி வரும். இதனை செப்டம்பரில் அவர் ஒரே தவணையில் செலுத்தத் தவறினால், வட்டித் தள்ளுபடியுடன் சேர்த்து, நிலுவை அசலுடன் சேர்க்கப்பட்டு, தவணை மேலும் 20 மாதம் 17 நாட்கள் நீட்டிக்கப்படும். தள்ளுபடி இல்லாவிட்டால் மேற்கண்ட 6 மாத வட்டி ரூ.7 லட்சத்தில் வட்டிக்கு வட்டி சேர்ந்து ரூ.11,774 செலுத்த வேண்டி வரும். எனவே, இந்த தள்ளுபடியால் அவருக்கு இந்தத் தொகை மிச்சமாகியுள்ளது.

அதேநேரத்தில், கிரெடிட் கார்டை பொறுத்தவரை, ஒருவர் ரூ.1 லட்சம் நிலுவை வைத்திருப்பதாக எடுத்துக் கொள்வோம். இதன்படி அவர் வட்டிக்கு வட்டி சேர்த்து ரூ.19,336 செலுத்த வேண்டிவரும். தள்ளுபடியுடன் கணக்கிட்டால் ரூ.17,940 செலுத்தினால் போதும். எனவே, 6 மாத தவணையில் அவர்களுக்கு ரூ.1,396 மிச்சமாகும். கிரெடிட் கார்டு நிலுவைக்கு வட்டி மிக அதிகம். இதனால், மத்திய அரசின் அறிவிப்பால் கிரெடிட்கார்டு தாரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். இதேபோல் வாகன கடன் போன்ற இதர கடன்களுக்குள் கணக்கிடப்படும் என்றனர்.

No comments:

Post a Comment